சர்வதேச சந்தையில் ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலை 1,761 அமெரிக்க டொலராக அதிகரித்துள்ளது.
நேற்று தங்கத்தின் விலை 1757.5 அமெரிக்க டொலராக காணப்பட்ட நிலையில், தற்போது இதன் விலை அதிகரித்துள்ளது.
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக உலக பொருளாதாரத்தில் ஏற்பட்டிருந்த பாதிப்பு மற்றும் டொலரின் பெறுமதி உள்ளிட்ட காரணங்களால் தங்கத்தின் விலை அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
எனவே, எதிர்வரும் நாட்களில் இந்த விலை அதிகரிப்பானது இலங்கையிலும் பாதிப்பை ஏற்படுத்தலாம் என புறக்கோட்டை தங்க வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.