பஸ்களால் கிடைக்கும் வருமானம் குறைகின்றமை மற்றும் ஊழியர்கள் பற்றாக்குறை ஆகிய பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில், நடத்துனர் இல்லாமல் பஸ்களை இயக்குவதற்கான யோசனை போக்குவரத்து அமைச்சின் செயலாளரிடம் முன்மொழியப்பட்டுள்ளதாக இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்தார்.
நடத்துனர்கள் பற்றாக்குறை காரணமாக பல பஸ்கள் நடத்துனர்கள் இல்லாமல் இயங்குவதாகக் குறிப்பிட்ட அவர், மோட்டார் வாகன கட்டளைச் சட்டத்தின் நடத்துனர் அல்லது உதவியாளரை உள்ளடக்கும் விதிமுறைகளை மாற்றுமாறு கேட்டுக் கொண்டார்.
பணம் பெறுவதற்காக சாரதிக்கு அருகில் ஒரு பெட்டி அமைக்கப்படும் என்றும் மக்கள் நேர்மையாக செயற்படுவார்கள் என்று தான் நம்புவதாகவும் அவர் தெரிவித்தார்.