சதொச நிறுவனத்தில் பாரதூரமான வெள்ளைப்பூண்டு ஊழல் ஏற்பட்டுள்ளது என்பதை அரசாங்கம் வெளிப்படையாக ஏற்றுக்கொள்வதாக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன இன்று (05) சபையில் தெரிவித்தாா்.
இவ்வாறான ஊழல்கள் முதலும் கடைசியுமான சந்தர்ப்பம் இது இல்லை. இதற்கு முன்னரும் இவ்வாறான ஊழல்கள் இடம்பெற்றள்ளதாகவும் சுட்டிக்காட்டிய அவர் கடந்த அரசாங்கத்தின் காலப்பகுதியில் லக் சதொசவில் இடம்பெற்ற பாரதூரமான ஊழல்கள் தொடர்பிலான 06 முறைப்பாடுகள் குற்றபுலனாய்வு திணைக்களதினால் விசாரணை செய்யப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டாா்.
இந்த அரசாங்கம் ஆட்சிபொறுப்பை ஏற்கும்போது சதொச நிறுவனத்தில் 20 பில்லியன் ரூபா நட்டத்தை
சந்தித்திருந்ததாகவும் அவர் தெரிவித்தாா்.
இன்றைய நாடாளுமன்ற கூட்டத்தொடரின் வாய்மூல கேள்விக்கு பதலளிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டாா்.