வடக்கு, கிழக்கு மாகாணங்களில் எத்தனையோ விபரீதங்கள் நடைபெறுகின்றன. இவை யாவற்றையும் முறியடிக்க வேண்டுமானால் கூட்டு சமஷ்டி எமக்கு அவசியம். ஒற்றையாட்சியின் கீழ் “இராணுவமே வெளியேறு” என்றால், அடுத்த நிமிடமே எம்மைப் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்து சிறையில் அடைத்து விடுவார்கள் என்று யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினா் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளாா்.
ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டாா்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
ஒற்றையாட்சித் தலைமைத்தவம் பெரும்பான்மையினா் கட்சிகள் வசம் இருக்கும்போது சிறுப்பான்மையினா் பாகுப்பாட்டுக்கு உள்ளாவார்கள் என்பதால் ஒற்றையாட்சியைத் தமிழ்க் கட்சிகள் விரும்புவதில்லை. அதன் காரணமாக அதிகாரப் பகிர்வுக்கு செயல்வடிவம் கொடுப்பது சமஷ்டி ஆட்சி முறையே. அதனால் தான் சமஷ்டியை கோருகிறோம். அதேபோன்று கூட்டு சமஷ்டி முறை கூடிய அதிகார்ஙகளை அலகுகளுக்கு அல்லது பிராந்தியங்களுக்கு வழங்கும்.
மேலம், வழகிழ்ககு மாகாணங்களில் இருச்து இராணுவத்தை வெளியேற்றினால் தான் தமிழர் தாயகம் உய்யும்.தற்போது அடிமை நாடாக மத்திய அரசாங்கம் வடக்கு கிழக்கை போரின் பின் நிர்வகித்து வருகின்றது. உள்நாட்டுப் பிராந்திய பாதுகாப்பு கூட்டு சமஷ்டியில் பிராந்தியங்களுக்கே வழங்கப்படும்.
படையினர் தொடர்ந்து வடகிழக்கு மாகாணங்களில் இருப்பதால் இன்னும் எத்தனையோ விபரீதங்கள் நடைபெறுகின்றன. இவை யாவற்றையும் முறியடிக்க வேண்டுமானால் கூட்டு சமஷ்டி எமக்கு அவசியம். ஒற்றையாட்சியின் கீழ் இராணுவமே வெளியேறு என்றால் அடுத்த நிமிடமே எம்மை பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கிழ் கைதுசெயது சிறையில் அடைத்து விடுவார்கள் என்று சுட்டிக்காட்டினாா்.