நாட்டில் இதுவரை கொரோனா தடுப்பூசி பொற்றுக்கொள்ளதாக 15 – 19 வயதுக்கு இடைப்பட்ட சிறுவர்களுக்கு “பைசா்” தடுப்பூசியை பெற்றுக்கொடுப்பதற்கான ஆலோசனைகள், தொற்று நோய் தொடர்பான நிபுணர்களின் குழுவினரால் சுகாதார அமைச்சுக்கு முன்வைக்கப்பட்டுள்ளன.
இந்த வயதெல்லைக்குட்பட்ட சிறுவர்களுக்கு முறையான வேலைத்திட்டத்துக்கமைய தடுப்பூசி வழங்கப்பட வேண்டும் என்று அந்த நிபுரணா்களின் குழு உறுப்பினரான, உடற்கூற்று நோய்கள் தொடர்பான விசேட வைத்திய நிபுணர் ஹர்ஷ சதீஸ்சந்ர தெரிவித்துள்ளாா்.
ஆரோக்கியமான 15 – 19 வயதுக்கிடைப்பட்ட சிறுவர்களுக்கு “பைசர்” தடுப்பூசி பெற்றுக்கொடுக்குமாறு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. இந்த வயதுக்கிடைப்பட்டவர்கள் தடுப்பூசி பெற்றுக்கொள்ளவேண்டியது அவசியமாகும். ஆனால், கட்டாயம் தடுப்பூசி செலுத்திக்கொள்ளுமாறு வட்புறுத்தவில்லை என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளாா்.
15 – 19 வயதுக்கு இடைப்பட்டவர்களுக்கு இரண்டாம் கட்ட தடுப்பூசி வழங்குவது தொடர்பில் தற்போது கவனம் செலுத்தவேண்டியதில்லை. முதலாம் கட்ட தடுப்பூசி ஏற்றப்பட்டதன் பின்னா், தேவை ஏற்படின் இரண்டாம் கட்ட தடுப்பூசியை பெற்றுக்கொடுப்பதற்கு அவசியமான ஆலோசனைகள் வழங்கப்படுமெனவும் அவர் தொிவித்துள்ளாா்.