நாளை 21ஆம் திகதி தொடக்கம் 138 புகையிரத சேவைகளை ஆரம்பிப்பதற்கு திட்டமிடப்பட்டிருந்த நிலையில், உரிய தரப்பினரிடமிருந்து உத்தியோகபூர்வ அனுமதி இதுவரை கிடைக்காத காரணத்தினால் புகையிரத சேவைகளை ஆரம்பிப்பதற்கான திகதி மறு அறிவித்தல் வரை பிற்போடப்பட்டுள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.
புகையிரத திணைக்களத்தின் பொது முகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தர இதனைத் தெரிவித்துள்ளார்.
நாளை மறுதினம் ஜனாதிபதி தலைமையில் இடம்பெறவுள்ள கொரோனா ஒழிப்பு செயலணிக் கூட்டத்தின் போது இது தொர்பில் இறுதித் தீர்மானம் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இதன் காரணமாக நேற்றைய தினம் புகையிரத நிலைய ஊழியர்களை பணிப்பு அழைக்கும் நடவடிக்கைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்ததாக புகையிரத நிலைய அதிபர் சங்க தலைவர் கசுன் சாமர தெரிவித்தார்.