கிழக்கு மாகாணத்தின் தற்போதைய ஆளுநரை, வெளிநாடொன்றின் தூதுவராக நியமித்துவிட்டு அவரின் இடத்திற்கு கிழக்கு மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் முஸ்லிம் பிரமுகர் ஒருவரை நியமிக்க அரச மேல்மட்டத்தில் ஆராயப்பட்டு வருவதாக அறியமுடிந்தது.
புதிதாக நியமிக்கப்படும் ஆளுநர், ஆளுங்கட்சியின் அரசியல் செல்வாக்கு அந்த மாகாணத்தில் மேலோங்க செயற்படக் கூடியவராக இருத்தல் வேண்டுமென அரச மேல்மட்டத்தில் கருதப்படுவதாக தெரிகிறது.
முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லாஹ்வின் பெயரை ஒரு தரப்பும், முன்னாள் அமைச்சர் பஷீர் சேகுதாவூத்தின் பெயரை மற்றுமொரு தரப்பும் அரச மேல்மட்டத்திடம் பரிந்துரைத்துள்ளன. ஆனால் ஹிஸ்புல்லாஹ்வின் பெயரை ஜனாதிபதி தரப்பு விரும்பவில்லையென அறியமுடிந்தது.
எவ்வாறாயினும் விரைவில் இதற்கான முடிவை எடுப்பதற்கு அரச உயர்மட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.