(மயூரன்)
வன்முறைக்கு தயாரானார்கள் எனக் கூறப்படும் ஒரு குழுவினர் இராணுவத்தினரை கண்டதும் தமது ஆயுதங்களை கைவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
யாழ்ப்பாணம் புத்தூர் ஆவரங்கால் வடக்கு பகுதியில் நேற்று (01) வெள்ளிக்கிழமை மாலை இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குழுவொன்று மோதல் சம்பவம் ஒன்று தயாராக இருப்பதாக இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்துக்கு இராணுவத்தினர் சென்றனர்.
இந்நிலையிர் இராணுவத்தினரை கண்டதும் அவர்கள் தம்மிடமிருந்த ஆயுதங்களை வீசி விட்டு தப்பி சென்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் இராணுவத்தினரால் , அச்சுவேலி பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து, அங்கு சென்ற சென்ற அச்சுவேலி பொலிஸார் ஆயுதங்களைக் கைப்பற்றினர்.
,6 மோட்டார் சைக்கிளில் 12க்கும் மேற்பட்டவர்கள் சம்பவ இடத்தில் கூடி நின்றதாகவும் அவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.