அரசாங்கத்தின் மீது மக்கள் வைத்திருந்த நம்பிக்கை தற்போது உடைந்துவிட்டதாக பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவரும் மின்சக்தி அமைச்சருமான உதய கம்மன்பிடி தெரிவித்துள்ளார்.
இவ்வாறு உடைந்துவிட்ட நம்பிக்கையை மீள கட்டியெழுப்புவது இலகுவான விடயம் அல்லவெனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
எவ்வாறாயினும், முறையான திட்டமொன்றினை வகுத்து செயற்படுவோமானால் இழந்த நம்பிக்கையை மீள பெற முடியும் எனவும் அமைச்சர் உதய கம்மன்பில குறிப்பிட்டார்.
அரசாங்கத்திலிருந்து வெளியேறுவது என்பது தனக்கு இலகுவான விடயம் என குறிப்பிட்ட அவர், எவ்வாறாயினும் அரசாங்கத்தினுள் இருந்துக்கொண்டு ஒரு எதிர்க்கட்சியைப் போல செயற்பட்டு அரசாங்கத்தை சரியான பாதையில் கொண்டுசெல்ல முயற்சிப்பதாகவும் மின்சக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தார்.