சதொச நிறுவனத்துக்கு பெற்றுக்கொடுக்கப்பட்ட சுமார் 150 இலட்சம் ரூபாவுக்கும் அதிக பெறுமதி கொண்ட 56,000 கிலோ வரையிலான இரு வெள்ளைப்பூண்டு கொள்கலன்களை, உயர் அதிகாரிகளின் எந்த அனுமதியும் இன்றி, மூன்றாவது தரப்பொன்றுக்கு விற்பனை செய்த விவகாரத்தில், மற்றொரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பம்பலபிட்டியைச் சேர்ந்த 55 வயதான வர்த்தகர் ஒருவரின் புதல்வரே இவ்வாறு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் நிஹால் தல்துவ கூறினார்.
கைதான சந்தேக நபரை இன்று (23) நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.