தேர்தலுக்கு முன்னர் மற்றுமொரு குண்டுத் தாக்குதல் நடத்தப்படும் என்ற சந்தேகம் தமக்கு உள்ளதாக கொழும்பு − தெவடகஹ பள்ளிவாசலின் தலைவரும் அஸாத் சாலியின் சகோதரருமான ரியாஸ் சாலி தெரிவிக்கின்றார்.
ஊடகமொன்றுக்கு கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இம்முறை ஏதேனும் தாக்குதல் நடத்தப்படும் பட்சத்தில், அதற்கு முஸ்லிம்கள் பொறுப்பு கிடையாது எனவும் அவர் கூறுகின்றார்.