இன்றைய தினம் முஸ்லிம், தமிழ் மக்கள் வாழும் வாகரை காரமுனையில் திட்டமிட்டு வெளி மாவட்ட மக்களை மிகவும் இரகசியமான முறையில் குடியேற்ற எடுத்த முயற்சியை எதிர்த்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் களமிறங்கி தடுத்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.
வெளி மாவட்டங்களிலிருந்து அழைத்து வரப்பட்ட சுமார் 50க்கும் மேற்பட்டவர்களை குறித்த பகுதிகளில் குடியேற்ற முயன்ற நிலையிலேயே சாணக்கியன் களமிறங்கியுள்ளதாக அறியக் கிடைக்கிறது.