நவம்பர் 1ஆம் திகதி தொடக்கம் மேலதிக வகுப்புகளை நடத்துவதற்கு எதிர்ப்பார்ப்பதாக அகில இலங்கை நிபுணத்துவ சங்கம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பான சுகாதார வழிகாட்டல்கள் விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்ப்பதாகவும் அந்த சங்கம் குறிப்பிட்டுள்ளது.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது, அதன் தலைவர் அமித் புஸ்ஸல்ல இதனைத் தெரிவித்தார்.
வகுப்பறை ஒன்றில் நூற்றுக்கு 50 சதவீதம் அல்லது அதிகபட்சமாக 100 மாணவர்கள் மாத்திரமே கலந்து கொள்ளும் வகையிலான விசேட சுகாதார சுற்றறிக்கை ஒன்றை தயாரித்து வழங்குமாறு நேற்றைய தினம் ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்ற கொரோனா செயலணியின் போது அறிவுறுத்தல் வழங்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.