Our Feeds


Thursday, October 7, 2021

Anonymous

இரண்டாவது தடவையாகவும் மீண்டும் யாருக்கு கொரோனா தொற்று ஏற்படும்?

 



கொவிட் தொற்றுக்கு உள்ளாகி குணமடைந்த நூறு பேரில் ஒருவருக்கு மீண்டும் தொற்று ஏற்படும் அவதானம் காணப்படுவதாக ஜர்னல் வொச் இதழ் வௌிப்படுத்தியுள்ளது.


எவ்வாறாயினும், கொவிட் தடுப்பூசி டோஸ்கள் இரண்டையும் பெற்றுக் கொண்ட நபர்கள் மீண்டும் வைரஸ் தொற்றுக்கு உள்ளாகுவது தொடர்பில் தொடர்ந்தும் ஆய்வு ரீதியாக தௌிவுப்படுத்தப்பட வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

கலிபோனியாவில் தொற்றாளர்களின் தரவுகளை அடிப்படையாக கொண்டு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளுக்கு அமைய முதியோர்கள், பெண்கள், நோய் எதிர்ப்புச் சக்தி குறைவாக உள்ள நபர்கள் மற்றும் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களுக்கு இவ்வாறு மீண்டும் தொற்று ஏற்பட வாய்ப்புள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதேவேளை, இங்கிலாந்து ஆராச்சியாளர்கள் சில் மேற்கொண்ட ஆய்வில் கொவிட் தடுப்பூசி டோஸ்கள் இரண்டையும் பெற்றுக் கொண்ட சிலருக்கு கடந்த காலத்தில் டெல்டா வைரஸ் தொற்று ஏற்பட்ட போதும் ஒரு தடுப்பூசியையும் பெற்றுக் கொள்ளாதவர்களை விட மிகவும் குறைவு என குறிப்பிடப்பட்டுள்ளது.


எனினும், இரண்டாவது தடுப்பூசி டோஸைப் பெற்றுக் கொண்டு மூன்று மாதங்களின் பின்னர் குறிப்பிட்டளவில் அது குறைந்துள்ளதாக அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.

இருப்பினும், குறித்த ஆய்வில் எஸ்ட்ரா செனகா மற்றும் பைஸர் டோஸை எடுத்துக் கொண்ட நபர்களின் தரவை மட்டுமே பயன்படுத்தியுள்ளனர்.

இதற்கிடையில், நாட்டில் உள்ள முதியவர்கள் மற்றும் முன்னணி சுகாதார பணியாளர்களுக்கு பூஸ்டர் டோஸ் அல்லது மூன்றாவது டோஸை வழங்குவதற்கு தேவையான ஃபைசர் டோஸ் தொகையை கொள்வனவு செய்ய உத்தரவிட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »