நாடு முழுவதுமுள்ள அனைத்து நகரங்களிலும் நாளை பிற்பகல் ஆசிரியர்களால் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று ஆசிரியர் அதிபர்கள் தொழிற்சங்க கூட்டணி தெரிவித்துள்ளது.
கொழும்பு கோட்டை ரயில் நிலையத்துக்கு முன்பாக நாளை பிற்பகல் 2.00 மணியளவில் இடம்பெறவுள்ள ஆர்ப்பாட்டத்தில் அதிக எண்ணிக்கையிலான ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் கலந்து கொள்வார்கள் என்று இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்தார்.
கொழும்பில் ஆர்ப்பாட்டம் நடக்கும் அதே நேரத்தில் நாட்டின் மற்ற நகரங்களிலும் ஆசிரியர்களின் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படும் என்று அவர் தெரிவித்தார்.