விவாகரத்துப் பெற்ற, கடந்த ஐந்து வருடங்களாக பிரிந்து வாழ்ந்த கணவனும் மனைவியும் ஒரே அரையில் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் காலி - ஊரகஸ்மங்ஹந்திய, கொரகீன பகுதியில் இடம்பெற்றுள்ளது.
கொரகீன பகுதியில் வசித்துவந்த 39 வயதுடைய ஆணொருவரும், 38 வயதுடைய பெண்ணொருவருமே அப்பகுதியிலுள்ள வீடொன்றிலிருந்து இவ்வாறு சடலங்களாக நேற்றுமுன்தினம் (22)க மீட்கப்பட்டுள்ளனர்.
அந்த வீட்டின் அறையொன்றின் கட்டிலில் கையில் பூச்செண்டுடன் பெண்ணின் சடலமும் தூக்கில் தொங்கிய நிலையில் ஆணின் சடலம் மீட்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்த அவர், கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்னர் விவாகரத்துப் பெற்றவர்கள் என விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது எனத் தெரிவித்த பொலிஸார், மேலதிக
விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தனர்.