ஐரோப்பிய ஒன்றியத்தின் 27 உறுப்பினா்களைக்கொண்ட பொருளாதார கூட்டமைப்புடன் இலாபகரமான வர்த்தக அந்தஸ்தை தக்க வைத்துக்கொள்ள வேண்டுமாயின், சந்தேகநபா்களை விசாரணையின்றி கைதுசெய்ய பொலிஸ் அதிகாரங்களை வழங்கும் சா்ச்சைக்குரிய பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை திருத்த வேண்டுமென ஐரோப்பிய ஒன்றியம் இலங்கையிடம் தொிவித்துள்ளது.
ஐரோப்பிய ஒன்றியத்தின் மூத்த அதிகாாிகள் குழு இலங்கை வருகையின்போது இந்த பிரச்சினை விவாதிக்கப்பட்டிருந்தது.
இந்த விஜயத்தின்போது, ஐரோப்பிய ஒன்றியம் மனித உரிமைகளை மதிக்க ஊக்குவிக்கும் ஒரு சாதகமான வா்த்தகத் திட்டத்தை மதிப்பாய்வு செய்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.