வெலிக்கடை சிறைச்சாலையில் சுமார் 50 கைதிகள் தற்போது கலவரத்தில் ஈடுபட்டு வருவதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
குறித்த அனைவரும் மரணதண்டனை மற்றும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட கைதிகள் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
சுமார் ஒரு மாத்திற்கு முன்னதாக சிறைச்சாலையின் கூரை மீதேறி சில கைதிகள் போராட்டத்தை ஆரம்பித்திருந்த நிலையில் தற்போது அது கலவரமான மாறியுள்ளதோடு, நிலைமையை கட்டுப்படுத்துவதற்காக மேலதிகமாக சிறைக்காவலர்கள் அழைக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கைதிகள் தற்போது சிறைச்சாலைக்குள் உள்ள பொருட்களுக்கு சேதங்களை ஏற்படுத்தி வருவதாகவும், சிறைகாவலர்கள் நிலைமைகளை கட்டுப்படுத்துவதற்காக கட்டுப்பாட்டு உபகரணங்களை பயன்படுத்தி வருவதாகவும் அறியமுடிகிறது.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் 5 வருடங்கள் தண்டனை அனுபவித்துவிட்டு விடுதலை அடைந்ததாகவும், ஆனால் 15 வருடங்களுக்கு மேலாகவும் சில கைதிகள் தண்டனை அனுபவித்து வருவதாக தெரிவித்த கைதிகள் சிலர், இந்த விடயத்தில் ஜனாதிபதி தலையிட்டு தீர்வொன்றை வழங்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளனர்.