Our Feeds


Sunday, October 17, 2021

SHAHNI RAMEES

பிரித்தானியாவிலிருந்து இலங்கைக்கு பரவியுள்ள புதிய ஆபத்தான நோய்!

 


\இதயம், நுரையீரல், சிறுநீரகம், மூளை, தோல், கண்கள் மற்றும் இரைப்பை குடல் உறுப்புகள் உட்பட பல்வேறு உடல் பாகங்கள் வீக்கமடையும் MIS-C எனப்படும் ஆபத்தான நோய் இலங்கையிலும் பரவியுள்ளது.

இலங்கையில் இந்த MIS-C எனப்படும் நோயினால் இதுவரை நான்கு குழந்தைகள் இறந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஆரம்பத்தில் ஐக்கிய இராச்சியத்தில் கண்டறியப்பட்ட இந்த ஆபத்தான நோய் இந்த ஆண்டு தொடக்கத்தில் இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்டது.

உலக சுகாதார நிறுவனம் (WHO) இந்த நோய் 19 வயது வரையிலான பிள்ளைகளை பாதிக்கும் என்று தெரிவித்திருந்தது.

COVID-19 தொற்றுக்கு பிறகு 02 – 06 வாரங்களுக்குள் இந்த தொற்று ஏற்படலாம் என்று சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பிள்ளைகளுக்கு வைரஸ் அறிகுறிகள் தென்பட்டால் பெற்றோர்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறும் உடனடியாக சிகிச்சை பெறவும் மருத்துவ நிபுணர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »