Our Feeds


Monday, October 4, 2021

Anonymous

பென்டோரா பேப்பர்ஸ்: முறைகேடான நிதி முதலீடு - சச்சின் உள்ளிட்ட இந்தியர்களும் சிக்கினர்!

 



பிரபலங்கள் முறைகேடாக வெளிநாடுகளில் பல கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளது மற்றும் சொத்துக்களை வாங்கி குவித்துள்ளது தொடர்பான பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது. இதில், இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் மற்றும் அரசியல் தலைவர்கள் பலரது பெயர்களும் இடம் பெற்றுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


பிரபலங்கள் முறைகேடாக வெளிநாடுகளில் பல கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளது மற்றும் சொத்துக்களை வாங்கி குவித்துள்ளது தொடர்பான பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது. இதில், இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் மற்றும் அரசியல் தலைவர்கள் பலரது பெயர்களும் இடம் பெற்றுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


கடந்த 2015ம் ஆண்டு பனாமா பேப்பர்ஸ் (panama papers) வெளியாகி உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது ‘பென்டோரா பேப்பர்ஸ்’ (Pandora Papers) ஆவணங்கள் வெளியாகியுள்ளது. சர்வதேச புலனாய்வு பத்திரிக்கையாளர்கள் கூட்டமைப்பு (International Consortium of Investigative Journalists (ICIJ)) மூலம் இந்த பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.


நிதி சேவை வழங்கும் 14 நிறுவனங்களில் இருந்து கசிந்த 11.9 மில்லியன் ஆவணங்களை 600க்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்கள் புலனாய்வு செய்து இந்த பட்டியலை வெளியிட்டுள்ளனர். இதில், அரசியல் தலைவர்கள், தொழிலதிபர்கள் உள்ளிட்டோர் வரி ஏய்ப்பு செய்து வெளிநாடுகளில் முதலீடு செய்துள்ளதும் சொத்துக்களை வாங்கி குவித்துள்ளதும் அம்பலமாகியுள்ளது. இந்த பட்டியலில் 300க்கும் மேற்பட்ட இந்தியர்கள் பெயர் இடம்பெற்றுள்ளது.


இந்தியாவின் கிரிக்கெட் ஜாம்பவான் என்று அழைக்கப்படும் சச்சின் டெண்டுல்கரின் பெயரும் இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளது. பனாமா பேப்பர்ஸ் ஆவணங்கள் வெளியான மூன்று மாதங்களில் விர்ஜின் தீவுகளில் உள்ள தனது நிறுவனத்தை கலைக்கும்படி சச்சின் கேட்டுக்கொண்டதாகவும் ஆவணங்களில் கூறப்பட்டுள்ளது.


கடந்த 2016 ஆம் ஆண்டு பனாமா நாட்டைச் சேர்ந்த மொசாக் ஃபென்செக்கா என்ற சட்ட நிறுவனத்தின் ரகசிய ஆவணங்கள் ஜெர்மனியைச் சேர்ந்த ஓர் ஊடகத்தில் வெளியானது. சர்வதேச புலனாய்வு பத்திரிக்கையாளர்கள் கூட்டமைப்பு புலனாய்வு செய்து இந்த பட்டியலை வெளியிட்டது. இதில், திரைப்பட நட்சத்திரங்கள் ஐஸ்வர்யா ராய், அமிதாப் பச்சன், டிஎல்ஃப் நிறுவனத்தின் தலைவர் கேபி சிங் மற்றும் அவருடைய ஒன்பது குடும்ப உறுப்பினர்கள், கவுதம் அதானியின் மூத்த சகோதரர் வினோத் அதானி ஆகியோரின் பெயர்கள் இடம் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »