Our Feeds


Friday, October 15, 2021

Anonymous

பாடசாலை மாணவர்களுக்கு இன்று முதல் கொரோனா தடுப்பூசி - பாடசாலைகளின் பட்டியல் இணைப்பு

 



18 முதல் 19 வயதுக்குட்பட்ட பாடசாலை மாணவர்களுக்கான ஃபைசர் தடுப்பூசியின் முதல் டோஸ் செலுத்தும் வேலைத்திட்டம் இன்று (15) முதல் கொழும்பு மாவட்டத்தில் ஆரம்பமாகவுள்ளது.


அதன்படி, கொழும்பு மாவட்டத்தில் 4 கல்வி வலயங்களைச் சேர்ந்த பாடசாலை மாணவர்களுக்கு தடுப்பூசி போடப்படவுள்ளது.

சுகாதார அமைச்சகம் மற்றும் கல்வி அமைச்சகத்தால் செயற்படுத்தப்படும் இந்த வேலைத் திட்டம் காலை 8.30 முதல் பிற்பகல் 3.30 வரை முன்னெடுக்கப்படவுள்ளது.

கொழும்பு மாவட்டத்தில் 18 முதல் 19 வயதுக்குட்பட்ட 24,000 பாடசாலை மாணவர்களுக்கு ஃபைசர் தடுப்பூசியின் முதல் டோஸ் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அதன்படி பின்வரும் தமிழ் பாடசாலைகளைச் நல்லாயன் அரசினர் பாடசாலையை சேர்ந்த மாணவர்கள் புனித பெனடிக் கல்லூரியில் தமக்கான முதலாவது டோஸ் தடுப்பூசியை பெற்றுக்கொள்ளலாம்.

பின்வரும் பாடசாலைகளைச் சேர்ந்த மாணவர்கள் விவேகானந்தா கல்லுாரியில் தமக்கான முதலாவது டோஸ் தடுப்பூசியை பெற்றுக்கொள்ளலாம்.

கணபதி வித்தியாலயம்
வுல்பெண்டேல் பெண்கள் பாடசாலை
விவேகானந்தா கல்லூரி
அல் ஹக்கீம் கல்லூரி
மத்திய கொழும்பு இந்து கல்லூரி

இதேவேளை, கொழும்பிலுள்ள விசாகா மற்றும் தேர்ஸ்டன் கல்லூரிகளில் தடுப்பூசிகள் அந்த பாடசாலை மாணவர்களுக்கு மட்டுமே வழங்கப்படும்.

மேலும், ஹோமாகம வலயத்தில் உள்ள 6 பாடசாலைகள், பிலியந்தல வலயத்தில் உள்ள 7 பாடசாலைகள் மற்றும் ஸ்ரீ ஜெயவர்த்தனபுர வலயத்தில் உள்ள 4 பாடசாலைகளிலும் முதலாவது டோஸ் தடுப்பூசி போடும் லேலைத்திட்டம் முன்னெடுக்கப்படும்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »