இரத்தினபுரி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜயசேகர உள்ளிட்ட மூவர் தமக்கு விதிக்கப்பட்டுள்ள மரண தண்டனையை செல்லுபடியற்றதாக்குமாறு கோரி தாக்கல் செய்துள்ள சீராய்வு மனு மீதான விசாரணை தொடர்பிலான திகதியை நீதிமன்றம் அறிவித்துள்ளது.
அதன்படி, எதிர்வரும் நவம்பர் மாதம் 25 ஆம் திகதி குறித்த வழக்கு விசாரணைகளை ஆரம்பிப்பதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று தீர்மானித்துள்ளது.
குறித்த மனு இன்று பந்துல கருணாரத்ன மற்றும் ஆர். குருசிங்க உள்ளிட்ட நீதிபதிகள் குழாத்தினால் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.