அவுஸ்திரேலியாவின் 2ஆவது பெரிய நகரமான மெல்போர்ன் நகரில் விதிக்கப்பட்டிருந்த பொது முடக்கத்தை 262 நாட்களுக்கு பின்னர், இரத்து செய்வதாக அந்நாட்டு அரசாங்கம், நேற்று இரவு அறிவித்தது.
அவுஸ்திரேலியாவில் மற்ற நாடுகளை விட கொரோனா பாதிப்பு குறைவாகவே இருந்த போதும் பரவலை கட்டுப்படுத்த கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
மெல்போர்ன் நகரில் அதிகப்படியான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதுடன், அங்கு கடந்த வருடம் மார்ச் மாதம் கொரோனா முதல் அலையால் பொது முடக்கம் அறிவிக்கப்பட்டது.
இடையில் முடக்கம் விலக்கப்பட்ட நிலையில், தொற்று மீண்டும் அதிகரித்ததால் பொது முடக்கம் மீண்டும் அமுல்படுத்தப்பட்டது.
இவ்வாறு 9 மாதங்களாக பொது முடக்கம் நீடித்து வந்ததால் கடும் சிரமத்துக்கு ஆளான மக்கள், வீதியில் இறங்கி போராட்டம் நடத்தினர்.
இதையடுத்தே பொது முடக்கத்தை இரத்து செய்வதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
தற்போது பொது முடக்கம் இரத்து செய்யப்பட்டதை அடுத்து மக்கள் பொது இடங்களை நோக்கி படையடுத்துள்ளதால் பொது இடங்களில் மக்கள் வெள்ளம் அலைமோதுகின்றமை குறிப்பிடத்தக்கது.