Our Feeds


Thursday, October 28, 2021

Anonymous

ஒரே நாடு ஒரே சட்டம் - ஜனாதிபதி செயலணியில் உலமா சபையின் காலி கிளை தலைவரும் அடக்கம்

 



ஜனாதிபதியினால் ஞானசார தேரர் தலைமையில் நியமிக்கப்பட்டுள்ள ஒரே நாடு ஒரே சட்டம் உருவாக்கத்திற்கான ஜனாதிபதி செயலணியில் உள்வாங்கப்பட்டுள்ள 13 நபர்களில் அகில இலங்கை ஜம்மிய்யதுல் உலமா சபையின் காலி கிளையின் தலைவர் மௌலவி M.Z மொஹமட்டும் ஒருவராக இணைக்கப்பட்டுள்ளார்.


இது தொடர்பில் உலமா சபையின் செயலாளர் அர்க்கம் நூராமித் விளக்­க­ம­ளிக்­கையில், செய­ல­ணியின் உறுப்­பி­னர்­களில் ஒரு­வ­ராக அகில இலங்கை ஜம் இய்­யத்துல் உலமா சபையின் காலி கிளையின் தலைவர் மெல­ளவி எம்.இஸட்.மொஹமட் நிய­மிக்­கப்­பட்­டுள்ளார். இவர் அகில இலங்கை ஜம் இய்­யத்துல் உலமா சபை சிபா­ரிசின் கீழ் நிய­மிக்­கப்­ப­ட­வில்லை. 


அவ­ரது பத­விக்­காலம் கால­வ­தி­யா­கி­யுள்­ளது. கொவிட் நிலைமை கார­ண­மாக காலி கிளைக்கு புதிய நிர்­வா­கி­களை தெரிவு செய்ய முடி­யா­துள்­ளது. நிலைமை சீராகி புதிய நிர்­வாக சபை நிய­மிக்­கப்­படும் வரை அவர் தற்­கா­லி­க­மாக தலைமை பதவி வகிப்பார் என தெரிவித்துள்ளார்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »