மத்திய வங்கி பிணை முறி மோசடி சம்பவத்தின் முதல் பிரதிவாதியான அர்ஜூன் மகேந்திரனை பலவந்தமாக இலங்கை்கு கொண்டுவர முடியாது என நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார்.
எவ்வாறாயினும், சட்ட ரீதியாக அர்ஜூன் மகேந்திரனை நாட்டுக்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகளில் சட்டமா அதிபர் ஈடுபட்டு வருவதாகவும் நீதி அமைச்சர் குறிப்பிட்டார்.
இது தொடர்பில் சிங்கப்பூர் அரசாங்கத்துடன் சட்டமா அதிபர் பேச்சுவார்தையில் ஈடுபட்டு வருவதாகவும், ஆனால் இதுவரையில் சாதகமான பதில் எதுவும் தமக்கு கிடைக்கவில்லை எனவும் நீதி அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
இதனால் அர்ஜூன் மகேந்திரன் இன்றி இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
மத்திய வங்கி பிணைமுறி மோசடி குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.