Our Feeds


Friday, October 1, 2021

Anonymous

மோட்டார் வாகன திணைக்களம் மற்றும் ஆட்பதிவு திணைக்களத்தின் சேவைகள் குறித்த அறிவிப்பு

 



நாராஹேன்பிட்டி மற்றும் வெரஹேர பகுதிகளிலுள்ள மோட்டார் வாகன திணைக்கள அலுவலகங்கள் இன்று (01) திறக்கப்படவுள்ளதாக திணைக்களம் அறிவித்துள்ளது.


திணைக்களத்தின் ஊடாக பெற்றுக்கொள்ளக் கூடிய சேவைகளை உரிய வகையில் பெற்றுக்கொள்ள 0112 677 877 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பை மேற்கொண்டு, திகதி மற்றும் நேரத்தை ஒதுக்கிக்கொள்ளுமாறு திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.

அத்துடன், மோட்டார் வாகன திணைக்களத்தின் மாவட்ட அலுவலகங்களின் நடவடிக்கைகள், மாவட்ட செயலாளரின் வழிகாட்டலின் கீழ் முன்னெடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வாகன பதிவுகளை மேற்கொள்வதற்காக அலுவலக நாட்களில் முற்பகல் 9 மணி முதல் 4 மணி வரை சேவையை பெற்றுக்கொள்ள முடியும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.

வாகன பதிவுகளை மேற்கொள்வதற்கு 0707 677 877 என்ற தொலைபேசி இலக்கத்திற்கும், சாரதி அனுமதிப் பத்திர சேவையை பெற்றுக்கொள்வதற்கு 0707 677977 என்ற தொலைபேசி இலக்கத்திற்கும் அழைப்பை மேற்கொண்டு, அறிந்துக்கொள்ள முடியும் என திணைக்களம் கூறுகின்றது.

அலுவலக நேரங்களுக்கு பின்னர், மேல் குறிப்பிட்ட இலக்கங்களுக்கு வட்ஸ்அப், வைபர் மற்றும் எஸ்.எம்.எஸ் சேவைகளின் ஊடாக சேவையை பெற்றுக்கொள்ள முடியும் என மோட்டார் வாகன திணைக்களம் தெரிவிக்கின்றது.

இதேவேளை ஆட்பதிவு திணைக்களத்தின் சேவைகளை எதிர்வரும் 4ம் திகதி முதல் மீள ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

எனினும், தேசிய அடையாளஅட்டையின் ஒரு நாளின் விநியோகிக்கும் நடவடிக்கை இடம்பெறாது என ஆட்பதிவு திணைக்கம் தெரிவித்துள்ளது.

பத்தரமுல்ல தலைமை அலுவலகம் :- 0115 226 126 / 0115 226 100
தென் மாகாண அலுவலகம் :- 0912 228 348
வட மாகாண அலுவலகம் :- 0242 227 201
வடமேல் மாகாண அலுவலகம் :- 0372 224 337
கிழக்கு மாகாண அலுவலகம் :- 0652 229 449

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »