கொரோனா வைரஸின் புதிய திரிபான டெல்டா பிளஸ், இலங்கையில் பரவுவதற்கான வாய்ப்புகள் காணப்படுவதாக இலங்கை வைத்தியர்கள் சங்கத்தின் தலைவர் விசேட வைத்திய நிபுணர் பத்மா குணர்தன எச்சரித்துள்ளது.
புதிய வைரஸ் திரிபாக டெல்டா பிளஸ் வைரஸ் இனங்காணப்பட்டுள்ளது. இந்த வைரஸ் மனிதர்களுக்கு எந்தளவான பாதிப்புக்களை ஏற்படுத்தும், எவ்வாறு இந்த வைரஸ் பரவும் என்பதுத் தொடர்பில் உலக சுகாதார ஸ்தாபனம் இதுவரையில் எதனையும் கூறவில்லை எனவும் அவர் கூறினார்.
கொரோனா வைரஸின் ஏனைய திரிபுகள்போல இந்த வைரஸும் நாட்டுக்குள் பரவுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.