Our Feeds


Wednesday, October 27, 2021

Anonymous

ஞானசார தேரர் தலைமையில் ஜனாதிபதியின் செயலணி உருவாக்கம் - சட்டத்தின் ஆதிக்கத்தை அவமரியாதை செய்யும் செயல் - ஹிதாயத் சத்தார்

 



பாதுகாப்புச் செயலாளராக கோட்டா இருந்தபோதுதான் காலியில் பொதுபல சேனா காரியாலயத்தை திறந்து வைத்ததுடன் இன்று இவ்வாறானதொரு செயலணியை நியமித்த இலங்கை ஜனாதிபதி சட்டத்தின் ஆதிக்கத்தை அவமரியாதை செய்வதாகத் தோன்றுவதுடன், ஜனநாயகக் கோட்பாடுகள் பற்றிய அறிவின்மைக்கு அவரது நடவடிக்கை ஆபத்தான முன்னுதாரணமாகும். என மத்திய மாகாண சபையின் முன்னாள் உறுப்பினரும், கண்டி மாவட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் அமைப்பாளருமான ஹிதாயத் சத்தார் தெரிவித்துள்ளார். 


அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,


கலகொடஅத்தே ஞானசார தேரர் தலைமையில் 13 பேர் கொண்ட ஜனாதிபதி செயலணியொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக வர்த்தமானி அறிவித்தல் வெளியாகியுள்ளது.  


“ஒரே நாடு ஒரே சட்டம்” என்ற விடயத்தை நடைமுறைப்படுத்துவதும், அந்தக் கருத்தை ஆய்வு செய்து சட்டமூலத்தை உருவாக்குவதும் ஞானசார தேரரின் தலைமையிலான செயலணியின் பொறுப்பாகும்.


வெறுப்பு, இனவாதம், தீவிரவாதத்தை தூண்டி, சட்டத்தை கையில் எடுத்து, சட்டத்தின் முன் குற்றவாளியாக காணப்பட்டு சிறைவாசம் அனுபவித்த ஒருவருக்கு ஒரே நாடு ஒரே சட்டத்தை அமல்படுத்தும் அதிகாரத்தை வழங்குவது கேலிக்கூத்தான விடயமாகும், அன்று பாதுகாப்புச் செயலாளராக கோட்டா இருந்தபோதுதான் காலியில் பொதுபல சேனா காரியாலயத்தை திறந்து வைத்ததுடன் இன்று இவ்வாறானதொரு செயலணியை நியமித்த இலங்கை ஜனாதிபதி சட்டத்தின் ஆதிக்கத்தை அவமரியாதை செய்வதாகத் தோன்றுவதுடன், ஜனநாயகக் கோட்பாடுகள் பற்றிய அறிவின்மைக்கு அவரது நடவடிக்கை ஆபத்தான முன்னுதாரணமாகும். என அவர் மேலும் தெரிவித்துள்ளார். 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »