பலாங்கொடை – பஹன்துடாவ நீர்வீழ்ச்சிக்கு அருகில் ஆபாச செயற்பாடுகளில் ஈடுபட்டு, அதனை வீடியோவாகப் பதிவு செய்து இணையத்தில் வெளியிட்ட குற்றச்சாட்டில் கைதான ஜோடிக்கு ஏழு வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட மூன்று மாத சிறைதண்டனை விதித்து பலாங்கொடை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதேவேளை 10,800 ரூபா அபராதமும் அவர்களுக்கு விதிக்கப்பட்டுள்ளது.
எல்பிட்டியவைச் சேர்ந்த 24 வயதுடைய பெண்ணொருவரும், மஹரகம பகுதியைச் சேர்ந்த 34 வயதுடைய ஆணொருவருமே இந்தச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட இருவரும் நீதிமன்றத்தில் குற்றத்தை ஒப்புக்கொண்டதையடுத்தே மேற்படி தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இவ்விருவரையும் செப்டெம்பர் 02 ஆம் திகதி குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் கைது செய்தனர். பின்னர் நீதிமன்றில் ஆஜர் செய்ப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டனர்.
அதன்போது கைதான ஆணுக்கு மேற்கொள்ளப்பட்ட கொவிட் பரிசோதனையில் அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.
இந்நிலையில் இந்த வழக்கு நேற்று (01) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது நீதிவான் மேற்கண்ட தண்டனையை விதித்து உத்தரவிட்டுள்ளார்.