விவசாயிகள் எதிர்கொண்டுள்ள பிரச்சினைக்கு எந்த வகையிலாவது தீர்வு வழங்க வேண்டியதே தற்போதைய தேவையாக இருப்பதாக முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தாா்.
ஹோமாகம, கொடகம ஸ்ரீ கேத்தாராம விகாரையில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டாா்.
அங்கு அவர் மேலும் கூறுகையில்,
நெனோ தொழில்நுட்பத்தினூடாக பெற்றுக்கொள்ளப்படும் பசளை புதிய விஞ்ஞான முறையாகும். பிரதானமாகத் தேவைப்படும் மூலப்பொருட்களைக் கொண்டு,சரியான விஞ்ஞான முறையினூடாக அளவிட்டு செய்யுமொரு செயற்பாடு.அதனால்,விவசாயிகள் விவசாயம் செய்வதற்காக ஏதாவதொரு முறையில் தீர்வை பெற்றுக்கொடுத்தால் சிறந்தது. அதுதான் தற்போதைய தேவையுமாகும்.
அரிசி மற்றும் சீனி விலை அதிகரிப்பு சந்தை நிலைமையை பொருத்தே தீர்மானிக்கப்படுகின்றது. அதனால், இந்த விலைகளில் ஏற்றத் தாழ்வு இருக்கவே செய்யும் என்று குறிப்பிட்டாா்.