Our Feeds


Wednesday, October 27, 2021

Anonymous

ஒரே நாடு ஒரே சட்டம்: ஜனாதிபதி செயலணியில் இன சமத்துவம் இல்லை – கரு ஜயசூரிய குற்றச்சாட்டு

 



ஒரே நாடு, ஒரே சட்டம் என்பதற்கான ஜனாதிபதி செயலணியில் சமத்துவம் பேணபடவில்லை எனச் சுட்டிக்காட்டியுள்ள முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய, ஏனைய இனத்தைச் சேர்ந்தவர்களுக்கும் பெண்களுக்கும் முக்கியத்துவம் வழங்கப்படவில்லை என்றும் சுட்டிக்காட்டியுள்ளாா்.


ஆகவே, இந்த குழுவின் பன்முகத்தன்மையைப் பேணுவதற்காக மக்கள் கருத்தைப் பெற்றுக்கொள்ள வேண்டியதும் அவசியமென அவர் வலியுறுத்தியுள்ளாா்.

இதுதொடர்பில் அவர் விளக்கமளித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவிலிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளாா். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

ஒரே நாடு, ஒரே சட்டம் என்பதற்கான ஜனாதிபதி செயலணிக்கான வர்த்தமானி அறிக்கைக்கு அமைவாக , நபர்கள் சமமான நிலையில் மதிக்கப்படுகிறாா்கள் என்பதை அந்த குழுவே முதலில் உறுதி செய்ய வேண்டும்.

ஆனால், இந்தக் குழுவில் சகல இன பிரதிநிதிகளைச் சேர்ந்த பிரதிநிதிகளோ, அல்லது பெண்களோ உள்வாங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஆகவே, இதன் உள்ளக பன்முகத்தன்மையைப் பாதுகாப்பதற்காகப் பொதுமக்களின் கருத்துக்களைப் பெற்றுக்கொள்ள வேண்டியது அவசியமாகும் என்றும் கரு ஜயசூரிய குறிப்பிட்டுள்ளாா்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »