Our Feeds


Monday, October 25, 2021

ShortNews Admin

அமைச்சு பதவியை இராஜினாமா செய்கிறாரா கெஹெலிய ? - கொழும்பு அரசியலில் பரபரப்பு !



சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, தமது அமைச்சுப் பொறுப்பை இராஜினாமா செய்ய தயாராகி வருவதாக உயர்மட்ட அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


அரச மருந்தாக்கற் கூட்டுத்தாபன தலைவர் டாக்டர் பிரசன்ன குணசேனவுடன் அமைச்சர் கெஹெலிய கொண்ட கருத்து முரண்பாட்டையடுத்து , கூட்டுத்தாபன தலைவர் தமது பதவியை இராஜினாமா செய்ய தீர்மானித்து அதற்கான கடிதத்தை ஜனாதிபதிக்கு அனுப்பியிருந்தார்.

ஆனால் அதனை ஏற்காத ஜனாதிபதி , டாக்டர் குணசேனவை மேலும் ஒருமாதகாலம் காத்திருக்குமாறு கேட்டுள்ளார்.

இந்த நிலைமையில் அமைச்சின் கடமைகளை செய்வதில் ஏற்பட்டுள்ள தார்மீக நெருக்கடிகளை கருத்திற்கொண்டு , அமைச்சு பதவியை இராஜினாமா செய்ய கெஹெலிய ஆலோசித்து வருவதாக சொல்லப்படுகிறது.

இவ்வாரம் இது தொடர்பில் விசேட அறிவிப்பு வரலாமென எதிர்பார்க்கப்படுவதால் கொழும்பு அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது .

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »