அநுராதபுரம் சிறைச்சாலையிலுள்ள தமிழ் அரசியல் கைதிகளை இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த துப்பாக்கி முனையில் அச்சுறுத்திய சம்பவத்தில், அச்சுறுத்தலுக்குள்ளான 08 சிறைக்கைதிகளுக்கு உரிய பாதுகாப்பை வழங்குமாறு உயர் நீதிமன்றம் இன்று (05) உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், குறித்த கைதிகளுக்கு உடனடி பாதுகாப்பை வழங்குமாறு சிறைச்சாலைகள் ஆணையாளா் நாயகத்துக்கு சட்டமா அதிபர் அறிவித்துள்ளாா்.