மொரட்டுவை பல்கலைக்கழகத்தில் மருத்துவ பீடத்தை ஆரம்பிப்பதற்கு தேவையான 10 மில்லியன் குவைட் தினார்களை (அண்ணளவாக 33.2 மில்லியன் அமெரிக்க டொலர்கள்) வழங்க அரபு பொருளாதார அபிவிருத்திக்கான குவைட் நிதியம் உடன்பாடு தெரிவித்துள்ளது.
இதற்கமைய, முன்மொழியப்பட்டுள்ள கருத்திட்டத்திற்கான ஒப்பந்தத்தினை மேற்கொள்வதற்காக நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ சமர்ப்பித்த அமைச்சரவை பத்திரத்திற்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.