சீனாவில் சமீபகாலமாக, மாணவர்களின் கல்விச்சுமையை குறைக்கும் வகையிலும், மன ஆரோக்கியத்தை பராமரிக்கும் வகையிலும் சட்டங்கள் இயற்றப்பட்டு வருகிறது. வார இறுதி நாட்களான வெள்ளிக்கிழமை, சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை மட்டுமே ஆன்லைன் விளையாட்டுக்களை சிறுவர்கள் விளையாட வேண்டும் என்று சமீபத்தில் சீன கல்வித்துறை அமைச்சகம் கட்டுப்பாடுகளை கொண்டு வந்தது.
இதனைத்தொடர்ந்து, குழந்தைகளின் தவறான நடத்தை அல்லது குற்றச் செயல்களுக்கு பெற்றோருக்கு தண்டனை வழங்கும் வகையில் சட்டம் கொண்டு வர சீன நாடாளுமன்றம் பரிசீலித்து வருகிறது. பெற்றோர் குழந்தைகளிடம் நேரத்தை செலவிட வேண்டும், விளையாட வேண்டும், உடற்பயிற்சி செய்தல் உள்ளிட்ட பழக்கவழக்கங்களில் ஈடுபட வேண்டும் என்று இந்த சட்டம் பரிந்துரைக்கிறது. மேலும் இந்த புதிய சட்டம், மாணவர்களின் வீட்டுப் பாடங்களை குறைத்து, வார இறுதி மற்றும் விடுமுறை நாட்களில் முக்கிய பாடங்களுக்கு பள்ளிக்குப் பிறகு டியூசன் கற்பிப்பதை தடை செய்யும் வகையில் சட்ட வரைவு தயாரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.