Our Feeds


Wednesday, October 20, 2021

SHAHNI RAMEES

பிரதமர் மோடிக்கு மும்மொழியிலான பகவத்கீதையை பரிசளித்தார் நாமல்!


 இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையே 2,500 வருடங்களாகக் காணப்படும் நட்புறவின் அடையாளமாக, பாரத தேசம் இந்த உலகிற்குத் தந்த மிகப் புனிதமான நூலான பகவத்கீதை வெளியீட்டின் முதற் பிரதி, இலங்கயின் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் நாமல் ராஜபக்ஷவினால் இந்தியப் பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்டு வெளியீடு செய்துவைக்கப்பட்டது.

இந்த நிகழ்வானது இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான பரஸ்பர உறவை மேலும் வளர்க்கும் செயலாகும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

மஹிந்த ராஜபக்ஷவின் அறிவுறுத்தலுக்கு அமைவாக, புத்தசாசன சமய, மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் கீழ் இயங்கும் இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களத்தால் இந்த பகவத்கீதை பதிப்பிக்கப்பட்டுள்ளது.

பாரத தேசம் இந்த உலகிற்குத் தந்த மிகப் புனிதமான நூல் பகவத்கீதை. அந்தப் பெருமைமிகு நூலினை இலங்கையில் வாழ்கின்ற இந்துக்கள் மட்டுமல்லாது, சகல மதத்தவர்களும் அறிந்துகொள்ளவேண்டும் என்ற நோக்கில் உருவாக்கப்பட்டதே இந்த நூல்.

இலங்கைத் திருநாட்டில் வாழுகின்ற அனைத்து மதத்தவர்களும் அறியும் வகையில் பகவத்கீதையில் அமைந்த சமஸ்கிருத சுலோகங்களை, சிங்களம், தமிழ், ஆங்கிலம் ஆகிய மும்மொழிகளிலும் அறியும் வண்ணம் இந்நூல் உருவாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.












Subscribe to this Blog via Email :
Previous
Next Post »