Our Feeds


Sunday, October 17, 2021

SHAHNI RAMEES

புனித மக்காவின் இமாம் சுதைஸ் நலமாக இருக்கிறார்.

 

புனித மக்காவின் இமாம் சுதைஸ் நலமாக இருக்கிறார்.


புனித ஹரம் ஷரீபின் இமாம் அப்துர் ரஹ்மான் சுதைஸ் கொரோனாவில் உயிரிழந்து விட்டதாக பரவும் செய்தி பொய்யானது.


புனித மக்கா மற்றும் மதீனாவின் இமாம் அப்துர் ரஹ்மான் சுதைஸ் அவர்கள் கொரோனா தொற்றில் உயிரிழந்துள்ளதாக சமூக வலைதளங்களில் பொய்யான செய்தியொன்று வைரலாக பரப்பப்பட்டு வரும் நிலையில் இமாம் அப்துர் ரஹ்மான் சுதைஸ் அவர்கள் தொழுகை நடத்தும் காட்சி அடங்கிய வீடியோ புனித மக்கா & மதீனா இரண்டு புனிதத்தளங்களின் உத்தியோகபூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.


சவூதி அரேபியாவின் பிரபல கவிஞர்களில் ஒருவரான அஷ்ஷாஇர் அப்துர் ரஹ்மான் சுதைஸ் என்பவர் உயிரிழந்த செய்தியே இமாம் அப்துர் ரஹ்மான் சுதைஸ் உயிரிழந்துள்ளதாக தவறுதலாக பரப்பப் பட்டுள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »