வேவல்தெனிய பிரதேசத்தில் மூன்று வயது சிறுவனை ஈடுபடுத்தி போதைப்பொருள் கடத்தலை முன்னெடுத்துவந்த குழுவினரை மேல் மாகாண புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் நேற்று கைது செய்யப்பட்டுள்ளதுடன், இந்தக் கடத்தல் நடவடிக்கைக்குச் சிறுவனின் தாயும் உதவியளித்துள்ளதாக விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.
சந்தேக நபர்களைக் கைது செய்து விசாரணைகளுக்கு உட்படுத்தியதன் பின்னர், சிறுவனின் உடையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 6 கிராம் போதைப்பொருள் கண்டறியப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.