போட்டோ ஷேரிங் தளமான இன்ஸ்டாகிராமில் இந்த வாரம் முழுவதும் சில புதிய அம்சங்களை பயனர்களுக்காக அறிமுகம் செய்ய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் ஒன்று தான் ‘Collabs’. இதன் மூலம் கன்டென்டுகளை உருவாக்கும் இருவர் கூட்டாக இணைந்து போஸ்ட்களை ஃபீட் செய்யவும், ரீல்ஸில் பகிரவும் முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய அம்சத்தில் அப்படி கூட்டாக இணைந்து பகிரும் பயனர்களின் பெயர்களும் அந்த போஸ்டில் இடம் பெற்றிருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு இருவரது ஃபாலோயர்களும் அதனை பார்க்கவும், லைக் மற்றும் கமெண்ட் செய்யவும் முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு ஒரு பயனர் மற்றொருவரிடம் Collaborator-ஆக இணைய ரெக்வொஸ்ட் அனுப்ப வேண்டி உள்ளது. அதை மற்றொரு பயனர் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
அதே போல டெஸ்க்டாப்பில் இருந்து போட்டோ மற்றும் வீடியோக்களை பகிரும் வசதியையும் இன்ஸ்டாகிராம் தொடங்க உள்ளதாம். மேலும் இன்ஸ்டா மூலம் நிதி திரட்டுவதற்கான (Fundraising Campaign) வசதியையும் அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது தவிர இசை சார்ந்த இரண்டு புதிய அம்சங்களையும் இன்ஸ்டா கொண்டு வர உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.