உலகிலுள்ள முக்கிய அரசத் தலைவர்கள், அரசியல்வாதிகள் மற்றும் செல்வந்தர்களின் இரகசிய தகவல் பல கசிந்துள்ளன.
இரகசிய ஆவணங்கள், நிதித் தொடர்பான தகவல்கள் உள்ளிட்ட முக்கிய ஆவணங்களே இவ்வாறு கசிந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
“பென்டோரா பேப்பர்ஸ்” என்ற பெயரிலேயே இந்த இரகசிய ஆவணங்கள் கசிய விடப்பட்டுள்ளன.
35 தற்போதுள்ள மற்றும் முன்னாள் அரசத் தலைவர்களின் பெயர்களும் இவ்வாறு கசிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன், 300ற்கும் அதிகமான முக்கிய நபர்களின் பெயர்களும் இவற்றில் அடங்குவதாக அறிய முடிகின்றது.