நேற்றைய தினம் (15) இலங்கை மத்திய வங்கி 2,000 கோடி ரூபா பணம் அச்சிட்டுள்ளதாக முன்னாள் ஆளுநர் ரஜித கீர்த்தி தென்னகோன் தெரிவித்துள்ளார்.
அறிக்கை ஒன்றை வெளியிட்டே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, கடதாசி அச்சிடும் இயந்திரமாக மாறியுள்ள இலங்கை மத்திய வங்கியானது, நேற்றைய தினமும் 19.63 பில்லியன் பணத்தை (1963 கோடி) பணத்தை அச்சிட்டுள்ளது.
இதன் காரணமாகவே நாட்டில் தற்போது அனைத்து பொருட்களுக்குமான விலை கணிசமாக அதிகரித்துள்ளதாகவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுளு்ளது.