எரிபொருட்களின் விலைகளை அதிகரிப்பது குறித்து இதுவரையில் எந்தவொரு தீர்மானமும் மேற்கொள்ளப்படவில்லை என அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலை தொடர்ந்து ஊடகங்களுக்குக் கருத்து தெரிவித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில் நாட்டின் பொருளாதாரம் மற்றும் வரவு செலவுத் திட்டம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.