Our Feeds


Wednesday, October 27, 2021

Anonymous

நாய்கள் எவ்வளவு தான் குரைத்தாலும் 'தவலம்; முன்னோக்கிச் செல்லும். - அமைச்சர் ஜொன்ஸ்டன்

 



எவ்வளவுதான் அரசாங்கத்தை விமர்சனம் செய்தாலும், முன்னெடுக்கும் பணிகளை அரசாங்கம் ஒருபோதும் கைவிடாது எனத் தெரிவித்துள்ள நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ நாய்கள் எவ்வளவு தான்  குரைத்தாலும் 'தவலம்; முன்னோக்கிச்  செல்லும் என்று ஊர்களில் சொல்வதை நினைவுபடுத்தினார்.


“எமது அரசாங்கம் மிகவும் அமைதியான  அரசாங்கம், எமது ஜனாதிபதியும் அமைதியான தலைவர்” என்றார். கோபுரத்தின் மேல் செல்லும் துறைமுக பிரவேச  அதிவேக நெடுஞ்சாலை பணிகளை ஆரம்பித்து வைத்ததன் பின்னர், அங்கு கருத்துரைக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

நல்லாட்சி  யுகத்தில் நாங்கள்  ஓரளவு பின்னோக்கி செல்ல நேரிட்டது.மஹிந்த ராஜபக்‌ஷ ஆரம்பித்த திட்டங்களை குரோதம் , பொறாமை காரணமாக நல்லாட்சி அரசாங்கம் நிறுத்தியது.  அவ்வாறு நடந்திருக்காவிட்டால் துறைமுக நகரம் திறக்கப்பட்டிருக்கும் என்றார்.

கொவிட்  தொற்று நெருக்கடி காரணமாக  மக்களின் உயிர்களை காப்பாற்ற மாத்திரமன்றி  அபிவிருத்தித் திட்டங்களை தொடர்ந்து முன்னெடுப்பதற்கான  நடவடிக்கைகளையும் அரசாங்கம் மேற்கொண்டது.

பிரேமதாச குழுவும் திசானாயக்க குழுவும்  இந்த நாட்டுக்கு  பாதகமாகவே செயற்பட்டார்கள்.   மக்களின் வாழ்க்கையைப் பற்றிக் சிந்திக்கவில்லை. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ வை அவமதித்தார்கள்.

அவருடைய திறமையான தலைமைதுவத்தால்  தான் இன்று நீங்களும் நானும் இப்படி பேசிக் கொண்டிருக்கிறோம் என்றார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ நாட்டு நலனுக்காக சரியான முடிவு எடுத்ததால்தான் நானும் நீங்களும் ஒருவரை ஒருவர் சந்திக்க முடிந்தது. 
 

எனினும், தடுப்பூசி வழங்க தயாரான போது  ஒரு மாதம் வரை தாமதித்ததாக பொய்ப்பிரசாரம் செய்தனர். எமது ஜனாதிபதி  அமைதியான  தலைவர் ஆவார். அவர் அமைதியாக மக்களுக்கு செய்யவேண்டியவற்றை செய்து வருகிறார்.  எதிர்க்கட்சி  என்ன சொன்னாலும் நாங்கள் எங்கள் பாதையில்  செல்கிறோம். நாய்கள் எவ்வளவு தான்  குரைத்தாலும். தவலம் முன்னோக்கிச்  செல்லும் என்று ஊர்களில் சொல்வார்கள். 

எத்தகைய தடைகள் வந்தாலும் இந்த அரசாங்கம் முன்னோக்கிச் செல்லும் என்றார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »