பெரும்போக வேளாண்மைச் செய்கைக்குத் தேவையான சேதனப் பசளையை விரைவில் விவசாயிகளுக்கு விநியோகிக்கப்படும் என்று விவசாய அமைச்சின் செயலாளர் பேராசிரியர் உதித்த கே. ஜயசிங்க தெரிவித்துள்ளார்.
இதேவேளை, 5 லட்சம் லீற்றர் நெனோ நைதரசன் உரம் எதிர்வரும் சில தினங்களில் நாட்டிற்கு தருவிக்கப்படும் தரமற்ற உரத்தையோ கிருமிநாசினியையோ விவசாயிகளுக்கு எந்தவொரு சந்தர்ப்பத்திலும் விநியோகிக்கப்பட மாட்டாது என்றும் விவசாய அமைச்சின் செயலாளர் பேராசிரியர் உதித்த கே.ஜயசிங்க மேலும் தெரிவித்தார்.
(அரசாங்க தகவல் திணைக்களம்)