பாராளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ள புதிய பாராளுமன்ற உறுப்பினர்களில் பெரும்பாலானோர், தமது பாதுகாப்பிற்காக பாதுகாப்பு அமைச்சினால் வழங்கப்படும் துப்பாக்கியை இதுவரை பெற்றுக்கொள்ளவில்லை என பாராளுமன்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆளும் மற்றும் எதிர்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களே இவ்வாறு துப்பாக்கியை இதுவரை பெற்றுக்கொள்ளவில்லை என அறிய முடிகின்றது.
80திற்கும் அதிகமான புதிய பாராளுமன்ற உறுப்பினர்கள் இம்முறை பாராளுமன்றத்திற்கு தெரிவாகியிருந்தனர்.
இவ்வாறு புதிதாக தெரிவான பாராளுமன்ற உறுப்பினர்களில் 40திற்கு அதிகமான பாராளுமன்ற உறுப்பினர்கள் துப்பாக்கியை பெற்றுக்கொள்ளவில்லை என பாராளுமன்ற உயர் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்திற்கு தெரிவாகும் ஒவ்வொரு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும், தமது பாதுகாப்பிற்காக பாதுகாப்பு அமைச்சினால் துப்பாக்கி வழங்கப்படுவது வழமையான விடயமாகும்.
இதேவேளை, பாராளுமன்றத்திலுள்ள பழைய பாராளுமன்ற உறுப்பினர்கள், தமக்கான துப்பாக்கியை பெற்றுக்கொண்டுள்ளதாக தெரிய வருகின்றது. (T