Our Feeds


Saturday, October 16, 2021

SHAHNI RAMEES

‘பெண்டோரா’ சம்பவத்துடன் தொடர்புடைய ஆவணங்களை ஆய்வுக்கு உட்படுத்த நடவடிக்கை

 


சர்ச்சைக்குரிய பெண்டோரா ஆவணங்கள் தொடர்பில்ஆய்வுகளை மேற்கொண்டுஅடுத்தக்கட்ட விசாரணைகளை மேற்கொள்வதாக கையூட்டல் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

சம்பவத்துடன் தொடர்புடைய ஆவணங்களை ஆய்வுக்கும் உட்படுத்தும் நடவடிக்கைகள்எதிர்காலத்தில் ஆரம்பிக்கப்படும் என அதன் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

அதேநேரம்பல்வேறு தரப்பினர் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள முறைப்பாடுகள் தொடர்பிலும்விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேநேரம்வாக்குமூலம் வழங்குவதற்காகமுன்னாள் அமைச்சர் நிரூபமா ராஜபக்ஷவின் கணவர் திருக்குமரன் நடேசன்கையூட்டல் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் நேற்று முன்னிலையானார்.

முற்பகல் 11 மணியளவில் ஆணைக்குழுவில் முன்னிலையான அவர், 2 மணிநேரத்தின் பின்னர் அங்கிருந்து வெளியேறினார்.

திருக்குமரன் நடேசன்பெண்டோரா ஆவணங்கள் தொடர்பில்கடந்த 8 ஆம் திகதிமுதல் முறையாகக் கையூட்டல் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகி, 3 மணிநேரம் வாக்குமூலம் வழங்கி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »