திருமணத்தின் போது வரதட்சனை - சீதனம் வாங்க மாட்டேன் என உறுதி மொழி படிவத்தில் கையெடுத்திட்ட பிறகே மாணவர்களுக்கு பட்டம் வழங்கப்படும் என இந்தியாவின் கேரளா, கோழிக்கோடு பல்கலைக் கழகம் அறிவித்துள்ளது.
எதிர்க்காலத்தில் வரதட்சனை வாங்கியது உறுதி செய்யப்பட்டால் அவர்களின் பட்டம் ரத்து செய்யப்படும் எனவும் குறித்த பல்கலைக் கழகம் அறிவித்துள்ளது.