Our Feeds


Wednesday, October 27, 2021

Anonymous

பெற்றோர்களின் கவனத்திற்கு: சிறுவர்களிடையே தொற்றா நோய்களின் தாக்கம் அதிகரிப்பு!

 



சிறுவர்களிடையே தொற்றா நோய்களின் தாக்கம் தற்போது அதிகரித்து வருவதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.


சங்கத்தின் மத்தியக்குழு மற்றும் ஊடகக்குழு உறுப்பினர் வைத்தியர் வாசன் ரட்ணசிங்கம் நேற்று (26) இடம்பெற்ற ஊடக சந்திப்பின்பொது இதனைத் தெரிவித்தார்.

பாடசாலை சிற்றுண்டிச்சாலை எவ்வாறு அமைய வேண்டும் என சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

எனினும், பல சிற்றுண்டிச்சாலைகள் அந்த சுற்றறிக்கைக்கு அமைய செயற்படுவதில்லையென வைத்தியர் வாசன் ரட்ணசிங்கம் குற்றம் சுமத்தியுள்ளார்.

இதேநேரம், மாணவர்களின் இணை பாடவிதான செயற்பாடுகள் மற்றும் உடற்பயிற்சி முறைமைகள் குறித்தும் கல்வி அமைச்சுடன் தங்களது கருத்துக்களைப் பரிமாறியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »