Our Feeds


Sunday, October 17, 2021

SHAHNI RAMEES

மஹிந்த மற்றும் பசிலுடன் கலந்துரையாடுங்கள் – பங்காளி கட்சிகளுக்கு கோட்டாபய உத்தரவு

 


யுகதனவி மின்னுற்பத்தி நிலையத்தின் 40 வீத பங்கை அமெரிக்காவின் New Fortress நிறுவனத்திற்கு வழங்கியமை தொடர்பில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ மற்றும் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஸவுடன் கலந்துரையாடுமாறு அரசாங்கத்தின் பங்காளி கட்சிகளுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ ஆலோசனை வழங்கியுள்ளார்.


குறித்த ஒப்பந்தம் தொடர்பில் கலந்துரையாடுவதற்கு ஆளும் கட்சியின் 11 பங்காளி கட்சிகளுக்கு நேரத்தை ஒதுக்கித்தருமாறு கோரி ஜனாதிபதிக்கு அனுப்பிய கடிதத்திற்கு, ஜனாதிபதியால் அனுப்பிய பதில் கடிதத்திலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

யுகதனவி மின்னுற்பத்தி நிலையத்தின் 40 வீத பங்கை அமெரிக்க நிறுவனத்திற்கு வழங்கியமை சட்டவிரோதமானது என தெரிவித்து, ஆளும் தரப்பின் 11 பங்காளிக்கட்சிகளின் தலைவர்கள் கடந்த செப்டம்பர் மாதம் 23 ஆம் திகதி பிரதமரை சந்தித்து கலந்துரையாடியிருந்தனர்.


அதன் பின்னர் நடத்தப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பின் போது, இந்த விடயம் தொடர்பில் ஜனாதிபதியுடன் கலந்துரையாடவுள்ளதாகவும் பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள் அறிவித்தனர்.


இதையடுத்து ஜனாதிபதியினால் அனுப்பியுள்ள பதில் கடிதம் தொடர்பில் ஆளும் கட்சியின் 11 பங்காளி கட்சிகளின் தலைவர்களும் இன்று சந்தித்து கலந்துரையாடவுள்ளனர்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »