எதிர்காலத்தில் சமையல் எரிவாயு விலை அதிகரிக்கப்படும் என நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அலகியவன்ன தெரிவித்தார்.
உலக சந்தையில் எரிவாயு விலை அதிகரித்துள்ளதன் காரணமாக, இலங்கையிலும் விலையை அதிகரிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டினார்.